1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Complaint against distributors D Rajender criticizes Rajini

விநியோகஸ்தர்கள் மீது புகார்.... ரஜினியை விமர்சித்த டி.ராஜேந்தர்

விநியோகஸ்தர்கள்
பொங்கலுக்கு  ரிலீசான தர்பார் படம் வசூல் சாதனை செய்ததாக பலரும் தெரிவித்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன் தர்பார் படத்தை வாங்கி விநியோகத்ததில் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் புகார் தெரிவித்தனர். 
 
இதுகுறித்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர்   கூறியுள்ளதாவது :
 
தமது படத்தை வாங்கியவர்களை காப்பாற்ற முடியாதவர் தமிழகத்தை எப்படி காப்பாற்றுவார் என ரஜினியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். 
 
விநியோகஸ்தர்கள் மீது காவல்துறையில் முருகதாஸ் புகார் அளித்தது வருத்தம் அளிக்கிறது, இயக்குநர் முருகதாஸ் தாமாக வந்து வழக்கை வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ! கருத்துக் கணிப்பில் தகவல் !