வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2024 (22:23 IST)

சீத்தாராம் யெச்சூரி மறைவு.. தவெக தலைவர் விஜய் இரங்கல்...!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
சீத்தாராம் யெச்சூரி கடந்த சில நாட்களாக டெல்லியில் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் காலமானார்.
 
சீத்தாராம் யெச்சூரி மறைவிற்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் சீத்தாராம் யெச்சூரி மறைவிற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவு செய்து கேட்டு   வருத்தம் அடைந்தேன். முற்போக்கு  அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவில் கொள்ளப்படும். அவரது குடும்பத்தினர் ஆதரவாளர்களுக்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பதிவு செய்துள்ளார்
 
Edited by Siva