செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 31 மே 2018 (17:04 IST)

ரஜினி வீடு முற்றுகை: போயஸ் கார்டனில் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடி சென்று சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் அளித்து ஆறுதல் கூறினார்.
 
இந்த நிலையில் நேற்று தூத்துகுடியிலும் பின்னர் சென்னையிலும் அளித்த பேட்டியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் கலவரம் ஏற்பட்டதாகவும், அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் எதற்கெடுத்தாலும் போராடி கொண்டிருந்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்றும் தெரிவித்தார்.
 
ரஜினியின் இந்த கருத்து போராடிய மக்களை அவமதிப்பதாகவும், ரஜினி தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஒருசில அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் வீட்டை முற்றுகையிட  தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் போயஸ் கார்டன் பகுதியே பெரும் பரபரப்பில் உள்ளது.