செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (13:55 IST)

விஜய்சேதுபதி தொகுத்து வழங்கிய மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் மோசடியா?

சன் டிவியில் ஒளிபரப்பான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் மோசடி நடந்துள்ளதாக சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உலகம் முழுவதும் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிகழ்ச்சி  சன் டிவியில் ஒளிபரப்பானது என்பதும் விஜய் சேதுபதி தமிழிலும் தமன்னா தெலுங்கிலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு போக்குவரத்து உட்பட அனைத்து செலவுகளையும் திருப்பி அளிப்பதாக மாஸ்டர் குழுவினர் கூறியதாகவும் ஆனால் தற்போது சொன்னபடி இன்னும் தரவில்லை என்றும் இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் போட்டியாளர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.