1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (11:15 IST)

ஒமிக்ரான் வைரஸ் பெயரில் மோசடி: காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு!

இந்தியா முழுவதும் தற்போது ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் ஒமிக்ரான் வைரஸ் உருமாறி வருகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலை ஒமிக்ரான் பரிசோதனைக்காக ஆர்சி.பிசிஆர் என்ற பெயரில் புதிய மோசடியில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
இலவச பரிச்சோதனை என்ற பெயரில் சிலர் மோசடியாக இணையவழிக் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் https://cybercrime.gov.in  என்ற வலைதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் புகார்களை பதிவு செய்ய உதவிக்கு 155260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது