செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 27 நவம்பர் 2024 (10:33 IST)

தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்கள மட்டும்தான் உருவாக்குவாங்க… விஜய்யை சீண்டினாரா வெற்றிமாறன்?

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இதையடுத்து விடுதலை 2 டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் கடந்த ஆண்டே முடிந்தது. அதையடுத்து விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் நீண்ட நாட்களாக படமாக்கினார். இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அதில் விஜய் சேதுபதி ஒரு இடத்தில் “ தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களதான் உருவாக்குவாங்க. அவர்களால் எந்த முன்னேற்றமும் இருக்காது.” எனப் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. அந்த வசனம் விஜய்யைதான் தாக்குவதாக அமைந்துள்ளதாக ஒரு சர்ச்சைக் கிளம்பியுள்ளது. மற்றொரு தரப்பில் கதையின் காலகட்டம் எம் ஜி ஆர் ஆட்சியில் நடக்கிறது. அதனால் எம் ஜி ஆரை தாக்குவதற்காக வைக்கப்பட்டுள்ளது எனக் கருத்துகள் எழுந்துள்ளன.