செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 27 நவம்பர் 2024 (10:39 IST)

நான் B.com மூனு வருஷம் படிச்சேன்… ஆனா வெற்றிமாறன் கிட்ட நாலு வருஷம் படிச்சிருக்கேன் – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இதையடுத்து விடுதலை 2 டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் கடந்த ஆண்டே முடிந்தது. அதையடுத்து விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் நீண்ட நாட்களாக படமாக்கினார். இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி “இந்த படம் என்பது முழுக்க முழுக்க வெற்றிமாறன் அவர்களின் படம். நாங்க எல்லாம் அவருக்கு அதில் துணையாக இருந்துள்ளோம். நான் காலேஜில் B.com மூனு வருஷம் படிச்சேன். ஆனால் வெற்றிமாறன் எனும் யூனிவர்சிட்டியில் நாலு வருஷம் ‘விடுதலை’ எனும் படிப்பைப் படித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.