1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2023 (15:20 IST)

5 ரூபாய் தபால் தலை அனுப்பினால் கம்ப்யூட்டர் இலவசம்.. தனியார் நிறுவனத்தின் அறிவிப்பு உண்மையா?

ஐந்து ரூபாய் தபால் தலைகள் 10 அனுப்பினால் ஒரு கம்ப்யூட்டர் இலவசம் என தனியார் நிறுவனம் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளதை அடுத்து பள்ளி மாணவர்கள் அதிகமாக ஐந்து ரூபாய் தபால் தலைகளை வாங்கி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு தனியார் நிறுவனம் ஒன்று 10 ஐந்து ரூபாய் தபால் தலை அனுப்பும் மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் அனுப்புவதாக இமெயில் அனுப்பி உள்ளது.

இதை நம்பி மாணவர்கள் பல தபால் நிலையத்திற்கு படையெடுத்து ஐந்து ரூபாய் தபால் தலைகளை வாங்கி அனுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து ஊடகம் ஒன்று விசாரித்த போது சம்பந்தப்பட்ட வாட்ஸப் எண் மற்றும் இணையதள  முகவரி போலி என்று தெரியவந்தது.

இது குறித்து  முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்த நிலையில் விசாரிக்க உத்தரவு விடப்பட்டதாக  தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை பல மாணவர்கள் ஐந்து ரூபாய் தபால் தலைகளை அனுப்பி உள்ள நிலையில் ஒருவருக்கு கூட இலவச கம்ப்யூட்டர் வராத நிலையில் இது மோசடியாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

Edited by Siva