வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (08:50 IST)

கள செயல்பாடுகளில் கலக்கும் விஜய் கட்சி தொண்டர்கள்! – தொடரும் நலத்திட்ட பணிகள்!

Tamizhaga Vetri Kazhagam
தமிழகத்தில் மிகவும் முன்னணி நடிகரும்,அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள  நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருகை தரும் செய்தி ஏற்கனவே ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றிருந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாகவும்,அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டு இருப்பதாகவும் பல அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்து கொண்டு இருக்கும் வேலையில் நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார்.



ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தில் ஏராளமான உறுப்பினர்களை கொண்டு இருக்கும் நேரத்தில் அரசியல் கட்சியாக அது மாற்றப்பட்டது பல்வேறு எதிர்பார்ப்புக்களை கொண்டு வந்தது தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்,தமிழக முதல்வருமான முக ஸ்டாலினும் அவருக்கு வாழ்த்தும்,வரவேற்பை கொடுத்துள்ளனர். கட்சியை தொடங்கிய பின்பு விஜய் அறிவித்திருந்த அறிக்கையில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் நமது இலக்கு என்றும் 2கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார்.அதேபோன்று கட்சி நிர்வாகிகள் வழக்கம் போல் இல்லாமல் மிகவும் ஆர்வத்துடனும்,உற்சாகத்துடனும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு செய்ய வேண்டும் என்று ஆலோசனைகளும்,அறிவுரைகளும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன..

 
அதே சமயம் கடந்த காலத்தில் வழங்கபட்டு வந்த அதே நலத்திட்ட உதவிகள் கட்சியின் சார்பில் தொடர் வேண்டும் என்றும் மக்கள் மத்தியில் நெருக்கமான ஒரு உறவை ஏற்படுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்றும் அடிப்படை அரசியல் மூலம் விஜய் அவர்கள் ஆலோசனை வழங்கி வருகிறார்..அதே போன்று சென்னை மற்றும் பல்வேறு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பம்பரம் போன்று சுழன்று ,சுழன்று வேலை செய்து வருகின்றன..

சென்னையில் தொடரும் மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தினர் சென்னை கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு பணிகள் செய்து வரும் நிலையில் தற்போது சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் G.பாலமுருகன் ஆலோசனை மற்றும் அறிவுரையின் படி சென்னை அம்பத்தூர் பகுதிக்குட்டப்பட்ட 90வது வட்டத்தில்  ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்காக்கப்பட்டன 90வது வட்ட நிர்வாகிகள் .அப்துல் ரஹ்மான்( வழக்கறிஞர்) பாலாஜி,முருகன் ஆகியோர் தலைமையில் சுமார் 100க்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு,உடை,மற்றும் மாணவ,மாணவியருக்கு, தேவையான நோட் புத்தகங்ககள் போன்ற ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதன் மூலம் தற்போது அம்பத்தூர் பகுதி மற்றும் 90வது வட்டத்தில் மக்களிடம் தமிழக வெற்றிக் கழகம் பெரும் ஆதரவை பெற்றுள்ளது..2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2ஆண்டுகள் இருக்கும் நிலையில் தற்போது முதலே பல்வேறு பணிகளை மேற்கொள்வதால் தமிழக வெற்றிக் கழகம் பெரும் மாற்றம் கொண்டு வர முடியும் என்று கட்சியினர்  இரவு பகலாக தொடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் இது போன்ற நலத்திட்ட உதவிகளும், மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை தொடர்ந்து பெற்று வருகிறது.

செய்தியாளர்: யாசர்