’’வலிமை’’ பட அஜித்தை புகழ்ந்த வில்லன் நடிகர்
நடிகர் அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடெக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் நாளை ரிலீஸாகும் எனக் கூறப்படும் நிலையில், இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தல் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வலிமை படம் அஜித் கேரியரில் மறக்க முடியாத படமாக இருக்கும். இப்படத்தின் நான் அவருடன் இணைந்து என் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று நடிகர் காத்திகேயா பிறந்தநாளை முன்னிட்டு தெலுங்கில் அவருக்கான ஒரு ஷ்பெஷல் பாடல் யூடியூப் பக்கத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.