வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2024 (14:11 IST)

விஜய் கட்சியின் பெயர் மாறுகிறதா? வேல்முருகன் எதிர்ப்பால் புது சிக்கல்..!

நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் இந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி சுருக்கமாக TVK என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஏற்கனவே வேல்முருகன் என்பவர் தமிழக வாழ்வுரிமை கழகம் என்ற கட்சியை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னாள் தொடங்கிய நிலையில் அவரது கட்சியும் சுருக்கமாக TVKஎன்று தான் அழைக்கப்பட்டு வருகிறது. 
 
எனவே தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்து அதை TVK என்று சுருக்கமாக அழைப்பதற்கு வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் இது குறித்து தனது ஆட்சேபனையை அவர் தேர்தல் ஆணையத்தில் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் ’க்’ இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது வேல்முருகன் எதிர்ப்பு தெரிவிப்பதால் விஜய் தனது கட்சியின் பெயரை மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran