ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (18:09 IST)

நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் கூறிய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்!

shah rukh khan - Vijay
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது புதிய அரசியல் கட்சியை அறிவித்து தனது அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அதில், 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தான் தங்கள் இலக்கு என்று தெரிவித்திருந்தார்.

விஜய்யின் அரசியல் வருகை  மற்றும் அவரது புதிய கட்சிக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும், சினிமாத்துறையினரும்  நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் கூறி தங்கள்  கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில்  புதிய அரசியல் கட்சி தொடங்கியதற்கு, தொலைப்பேசியின் மூலம் தொடர்புகொண்ட வாழ்த்துகள் கூறியுள்ளார்  நடிகர் ஷாருக்கான்.

விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் அட்லீயின்  இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஜவான் படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.