1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2024 (10:18 IST)

விஷால் அரசியல் கட்சி அறிவிப்பு இன்று வெளியாகிறதா? 2024 தேர்தலில் போட்டி என தகவல்..!

நடிகர் விஜய்யை தொடர்ந்து நடிகர் விஷால் அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இன்றே அவரது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எம்ஜிஆர் முதல் விஜயகாந்த் வரை பல உலக பிரபலங்கள் அரசியல் கட்சி ஆரம்பித்திருந்தாலும் எம்ஜிஆர் தவிர புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்த எந்த நடிகரும் இதுவரை வெற்றி பெறவில்லை என்பது தமிழக அரசியலின் வரலாறாக உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில் அவர் 2024 தேர்தலில் போட்டியில்லை என்றும் 2026 தேர்தலில் தான் போட்டி என்றும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் விஜய்யை அடுத்து நடிகர் விஷால் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று செய்திகள் வெளியான நிலையில் இன்று அவரது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் விஜய் போல் 2026 வரை காத்திருக்காமல் 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran