வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , சனி, 15 ஜூன் 2024 (10:13 IST)

தீ விபத்து ஏற்பட்டு அலுவலகத்தில் பொருட்கள் எரிந்து சேதம்!

கோவை ஆர்.எஸ் புரத்தில் கிழக்கு சம்பந்தம் சாலையில் தனியாருக்கு சொந்தமான அலுவலகத்தில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
 
தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
 
அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறைகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
 
தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
மேலும் அலுவலகத்தில் பணிபுரிந்து நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
 
பின்னர் இது குறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
மேலும் அலுவலகத்தில் இருந்த கணினிகள் மற்றும் உபகரணங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.