1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (13:16 IST)

பீஸ்ட், கே.ஜி.எப்2 படங்களுக்கு தமிழகத்தில் எத்தனை திரையரங்குகள்!

beast kgf2
தமிழகத்தில் சுமார் ஆயிரம் முதல் ஆயிரத்து 50 திரையரங்குகள் வரை இருக்கும் நிலையில் பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்கள் அடுத்தடுத்த நாளில் ரிலீஸ் ஆவதால் எந்த படத்திற்கு எவ்வளவு திரையரங்குகள் கிடைத்து உள்ளன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது 
 
தளபதி விஜய்யின் பீஸ்ட், திரைப்படத்திற்கு 800 முதல் 850 திரையரங்குகள் கிடைத்துள்ளதாகவும், கே.ஜி.எப்2  படத்திற்கு அதிகபட்சமாக 200 திரையரங்குகளில் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கே.ஜி.எப்2  படம் டப்பிங் படம் என்ற முத்திரை குத்தப்பட்டதால் தான் அந்த படத்திற்கு குறைந்த அளவே திரையரங்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது