செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 15 ஜூலை 2020 (07:50 IST)

ஆன்லைன் தேவையில்லை, டிவி தேவையில்லை: தமிழக அரசின் அசத்தல் முயற்சி

கொரனோ வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஒரு சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகிறது என்பது தெரிந்ததே 
 
மேலும் தமிழக அரசின் அறிவிப்பின்படி அரசு பள்ளிகளிலும் தற்போது ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உள்ளன. இரண்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலமும் 14 தனியார் தொலைக்காட்சி மூலமும் பாடங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தமிழக அரசு வீடியோ வடிவில் பாடங்கள் வழங்க உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இதற்காக பிரத்யேகமாக ஒரு ஸ்டூடியோ தயார் ஏற்பட்டுள்ளது 
 
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான பாடங்கள் வீடியோ மூலம் இங்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த வீடியோக்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று இந்த வீடியோவை தங்களது மொபைல் போன் அல்லது லேப்டாப்பில் டவுன்லோட் செய்து கொண்டு வீட்டில் தேவையான நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது 
 
தமிழக அரசின் இந்த சிறப்பு ஏற்பாடு காரணமாக ஆன்லைன் இல்லாமல், டிவி இல்லாமல் வீட்டிலேயே இருந்து பாடங்களை படித்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது