திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 14 ஜூலை 2020 (17:29 IST)

90% நேரங்களில் மூடாகவே இருக்கிறேன்... இலியானா வெளியிட்ட ஹாட் வீடியோ!

தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா  டி க்ரூஸ் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.  தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா.

இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விட்டார் இலியானா.  இதற்கிடையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோ கிராபர் ஆன்டருவை காதலித்து லிவ் இன் டூ கெதரில் சில காலம் வாழ்ந்து வந்தார். பின்னர் யார் கண்ணு பட்டதோ இவர்களின் காதல் முறிந்துவிட்டது.

காதல் முறிவுக்கு பின்னர் மனதில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் தனது சிங்கிள் வாழ்க்கையை என்ஜாய் செய்து வாழ்த்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாவில் போட்டோ கிராபர்களுக்கு ஒற்றை காலில் நின்று போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு  "எப்போதும்.. கிட்டதட்ட 90% நேரங்களில் மூடாகவே இருக்கிறேன்.." என்று கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார்.