திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (17:27 IST)

அழகிரி பேரணி தினத்தில் சிபிஐ ரெய்டு ஏன்? தம்பிதுரை கேள்வி

கடந்த 5ஆம் தேதி திமுகவை கதிகலங்க வைக்க மு.க.அழகிரி சென்னையில் அமைதிப்பேரணி நடத்துவதாக அறிவித்த நிலையில் அந்த செய்தியை திசை திருப்பவே அதே நாளில் சிபிஐ ரெய்டு நடந்ததாக ஒருசிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டை தற்போது அதிமுக எம்பி தம்பிதுரையும் எழுப்பியுள்ளார்.  அழகிரி பேரணி நடத்திய தினத்தில், குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனை நடத்தியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள தம்பிதுரை, திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளதாகவும் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

மேலும் சிபிஐ சோதனைக்கு காரணம் திமுக, பாஜகவுக்கு இடையே உள்ள நெருங்கிய தொடர்பு என தம்பிதுரை ஆணித்தரமாக குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் அழகிரிக்கு ஆதரவாக பாஜக தமிழக தலைவர்கள் சிலர் பேசி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே வரும் பாராளுமன்ற தேர்தலின்போது தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.