செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 5 பிப்ரவரி 2022 (14:39 IST)

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை கவலைக்கிடம்

பழம்பெரும் பாடகரான லதா மங்கேஷ்கர் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்திய சினிமாவில் மிகவும் முதுபெரும் பிண்ணனி பாடகிகளில் முக்கியமானவர் லதா மங்கேஷ்கர். இந்தி, பெங்காலி, தமிழ், கன்னடம் என பல்வேறு இந்திய மொழிகளிலும் பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். மும்பையில் வசித்து வரும் லதா மங்கேஷ்கருக்கு கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கொரொனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளார். இதற்கிடையே அவர் குறித்து வதந்திகள் பரவ ஆரம்பித்தன. இதை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம் ‘லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்  நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மும்பை தனியார் மருத்துவமனை கூறியுள்ளது.  தற்போது லதா மங்கேஷ்கருக்கு வென் டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.