1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Nanguneri congress mla tested positive

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

நாங்குநேரி
நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
மூன்றாவது அலையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம் 
 
குறிப்பாக ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சில எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரவிய நிலையில் தற்போது நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
 
அடுத்த கட்டுரையில்
மதமாற்ற தடை சட்டம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை!