வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (17:56 IST)

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

உலகளவில் சினிமாவில் அதிக விருதுகள் வாங்கிய நடிகர் கமல்ஹாசன். இன்றுவரை தனது தனித்துவ  நடிப்பு, இயக்கத்தால் மக்களை கவர்ந்து வருகிறார்.  இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம்  என்ற படத்தில் நடித்து வரும்  நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார்.

இந்நிலையில் உடல் நிலை பரிசோதனை செய்ய சென்னையில்  போரூரில் உள்ள ராமச்சந்திரா என்ற தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக  கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு  நவம்பர் மாதம்  நடிகர் கமல்ஹாசன் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.