1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:04 IST)

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது தொடங்கும்? முக்கிய தகவல்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்காக கடந்த சில வருடங்கள் முன்னதாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. முன்னதாக திமுக எதிர்கட்சியாக இருந்தபோது தொடர்ந்து இதை சுட்டிக்காட்டி பேசி வந்தது.

தற்போது திமுக ஆளுங்கட்சியாக உள்ள  நிலையில் எப்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடரும் என கேள்வி எழுந்தது.

 இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் நிறைவடையும் என  மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தகவல் தெரிவித்துள்ளார்.