ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 4 செப்டம்பர் 2021 (10:22 IST)

எஸ் பி வேலுமணியின் வங்கி லாக்கரில் சோதனை!

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வங்கி லாக்கரில் இன்று சோதனை நடந்து வருகிறது.

சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை எதிர்த்து எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுகவினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சோதனையின் போது அவரின் வங்கி லாக்கர் சாவி ஒன்றைக் கைப்பற்றினர்.

அதைக் கொண்டு இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று குனியாமுத்தூரில் உள்ள வங்கியில் லாக்கரைத் திறந்து சோதனை செய்தனர். லாக்கர்  கடைசியாக எப்போது திறக்கப்பட்டது என்பது குறித்தும் வங்கி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தி சென்றுள்ளனர்.