1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (21:03 IST)

மோடி-அமித்ஷாவின் கனவு பலிக்காது: வேல்முருகன்

velmurugan
மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என மோடி மற்றும் அமித் ஷா கனவு காண்கின்றனர் என்றும் அந்த கனவு பலிக்காது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார் 
 
அம்பானி அதானி போன்ற முதலாளிகளுக்கு மட்டுமே பாஜக அரசு சலுகை செய்து தருவதாகவும் ஜிஎஸ்டி வரி உயர்வு அத்தியாவசிய பொருள்களின் உயர்வு வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் பிரச்சினையாக இருக்கிறது என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்
 
2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகளை பணிகளை பாஜக தொடங்கி விட்டது என்றும் மோடி அமித்ஷா ஆகிய இருவரும் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள் என்றும் ஆனால் அந்த கனவு எந்தவிதத்திலும் பலிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
பாஜகவின் தேர்தல் கூட்டணியை முறியடிக்க நாடெங்கிலும் முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்