புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2024 (14:50 IST)

கணவரின் 3வது திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.. வேலூர் காவல் நிலையத்தில் பெண் புகார்..!

marriage
தனது கணவரின் மூன்றாவது திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள் என வேலூரில் பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் நிலையில் அவரது கணவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இதனை எடுத்து மறுமணம் செய்வதற்காக மேட்ரிமோனியல் இணையதளத்தில் பதிவு செய்திருந்த நிலையில் வேலூர் வாலிபர் ஒருவர் அவருடன் தொடர்பு கொண்டு தன்னுடைய மனைவி இறந்து விட்டதாகவும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.

இதனை அடுத்து சில மாதங்கள் இருவரும் நட்பாக பழகிய நிலையில் அதன் பின்னர் 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் வேலை காரணமாக இளம் பெண் சவுதி அரேபியாவுக்கு சென்ற நிலையில் திடீரென அவரது கணவரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது.

இதனை அடுத்து மீண்டும் இந்தியா வந்து கணவரை சந்திக்க முயன்ற போது அவரது வீட்டில் உள்ளவர்கள் சந்திக்க மறுத்ததாக கூறப்பட்டது. மேலும் தனது கணவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க முயற்சிகள் நடந்ததையும் அவர் அறிந்து கொண்டார்.

இதனை அடுத்து வேலூர் போலீசாரிடம் அந்த இளம் பெண் புகார் அளித்துள்ள நிலையில் அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Edited by Mahendran