திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2019 (07:10 IST)

வேலூர் தேர்தல்: நோட்டாவை விட குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற திமுக

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளிலும் அதிமுக ஒரே ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. 
 
கடந்த ஏப்ரலில் நடந்த தேர்தலில் திமுகவின் வெற்றி என்பது அதிகபட்ச வாக்கு வித்தியாசங்களில் இருந்தது. அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன், மத்திய சென்னையில் தயாநிதி மாறன், வடசென்னையில் கலாநிதி வீராசாமி, கள்ளக்குறிச்சியில் கவுதம் சிகாமணி, காஞ்சிபுரத்தில் செல்வம், மயிலாடுதுறையில் ராமலிங்கம், நாமக்கல்லில் சின்னராஜ், ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு, தூத்துகுடியில் கனிமொழி, திருவண்ணாமலையில் அண்ணாதுரை ஆகியோர் சுமார் 2 முதல் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். குறிப்பாக டி.ஆர்.பாலு, சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், கனிமொழி 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், கலாநிதி வீராச்சாமி 4.61 வாக்கு வித்தியாசத்திலும், வேலுச்சாமி 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்திலும்  வெற்றி பெற்றனர்.
 
குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் திருமாவளவன் மட்டுமே. 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிலும் அவர் உதயசூரியன் சின்னத்தில் நிற்கவில்லை என்பதால் வாக்கு வித்தியாசம் குறைந்தது
 
இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெறும் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் நோட்டாவிற்கு 9417 வாக்குகள் கிடைத்துள்ளது என்பதும் நோட்டாவை விட குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது மூன்று மாதத்திற்கு முன் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுகவின் வாக்கு சதவீதம் மூன்றே மாதத்தில் அதள பாதாளத்திற்கு இறங்கிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.