செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (08:05 IST)

வேளச்சேரி பள்ளத்தில் சிக்கியவர்களில் ஒருவரின் உடல் மீட்பு!

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் நான்காம் தேதி சென்னை முழுவதும் பெருமழை பெய்து சென்னையே ஒரு தீவு போல நீரால் சூழப்பட்டது.. அதனால் சென்னை முழுவதும் வெள்ளக் காடாக மாறியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

அன்று வேளச்சேரியில் ஐந்து பர்லாங் சாலை பெட்ரோல் பங்க் அருகே சாலையில் திடீரென 40 அடிக்கு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு, பெட்ரோல் பங்க் கூரையும் இடிந்து விழுந்துள்ளது. அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் 2 பேர் சிக்கினர்.

அவர்களின் உடல்களை தேடும் பணிகள் நான்கு நாட்களாக நடந்து வந்த நிலையில் இப்போது அதில் ஒரு தொழிலாளியான நரேஷ் என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடல் இப்போது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு தொழிலாளரின் உடலை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.