திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2023 (07:32 IST)

சென்னை மேயர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்: சரி செய்வதாக உறுதி அளித்த மேயர்..

சென்னையில் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக இன்னும் பல இடங்களில் இயல்புநிலை திரும்பாததால் பொதுமக்கள் ஆத்திரத்தில் சென்னை மேயர் பிரியா இல்லத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

சென்னை பெரம்பூர் மற்றும் திருவிக தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணன்தாஸ் சாலையில் மேயர் பிரியா குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் 71 வது வார்டு பொதுமக்கள் திடீரென மேயரின் வீட்டை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக தங்களுக்கு மின்சாரம் குடிநீர் இல்லை என்றும் கழிவுநீர் செல்ல வழி இல்லை என்றும் மழைநீர் அகற்றப்படவில்லை என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதனை அடுத்து பொதுமக்களிடம் பேசிய மேயர் ப்ரியா, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து பேசி உடனடியாக சரி செய்ய முயற்சி செய்வதாக உறுதி அளித்தார். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மேயர் ப்ரியாவின் இல்லத்தை திடீர் என பொதுமக்கள் முற்றுகையிட்டதால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

Edited by Siva