1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 16 செப்டம்பர் 2023 (13:29 IST)

விஜயலட்சுமி காலில் விழுந்து விட்டார் சீமான்: வீரலட்சுமி ஆவேசம்..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை நேற்று இரவு திடீரென நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்று கொண்ட நிலையில்  தமிழர் முன்னேற்றப்படலைவர் வீரலட்சுமி இதுகுறித்து கூறிய போது விஜயலட்சுமி காலில் விழுந்து சீமான் சமாதானம் ஆகிவிட்டார் என்றும் இந்த விவகாரத்தில் அவர் முற்றிலும் தோற்றுவிட்டார் என்றும் கூறியுள்ளார். 
 
போலீசார் காலில் விழுவதை விட, அரசாங்கத்தின் காலில் விழுவதை விட, விஜயலட்சுமி காலில் விழுந்து சீமான் இந்த விவகாரத்தில் முற்றிலும் தோற்று விட்டார் என்றும் இரண்டாவது முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என்றால் போலீசார் தன்னை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள் என்ற பயத்தில் தான் சீமான் இவ்வாறு செய்து உள்ளார் என்றும் வீரலட்சுமி தெரிவித்துள்ளார். 
 
அவரது இந்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran