வீரலட்சுமி, விஜயலட்சுமி வரணுமா.. அப்படியெனில் தேன்மொழியும் கயல்விழியும் வரணும்.. சீமானுக்கு சிக்கல்..!
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் இன்று காவல் நிலையத்தில் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் திடீரென நேற்று ஒரு நிபந்தனை வைத்தார்.
நான் காவல் நிலையத்தில் ஆஜராகும் போது விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆஜராக வேண்டும் என்றும் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரணை செய்தால் தான் உண்மை தன்மை தெரிய வரும் என்றும் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள வீரலட்சுமி உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள தயார், நானும் விஜயலட்சுமியும் ஆஜராகிறோம். ஆனால் அதே நேரத்தில் உங்கள் மனைவி கயல்விழி, விஜயலட்சுமி குற்றம் சாட்டிய தேன்மொழி ஆகிய இருவரும் ஆஜராக வேண்டும். இதற்கு நீங்கள் ஒப்புக்கொண்டால் நானும் விஜயலட்சுமி ஆஜராக தயார் என்று கூறியுள்ளார்.
இதனால் சீமானுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Siva