1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (18:24 IST)

வாசுதேவநல்லூர் அதிமுக எம்எல்ஏ மனோகரனுக்கு கொரோனா தொற்று..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி தினமும் சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற செய்தியை பார்த்து வருகிறோம்
 
நேற்று திருவாடனை தொகுதி எம்எல்ஏ நடிகர் கருணாஸ் மற்றும் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ பவுன்ராஜ் ஆகியோர் கொரனோ தோற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தியைப் பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது வாசுதேவ நல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ மனோகரன் அவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது
 
இதனை அடுத்து எம்.எல்.ஏ மனோகரன் தென்காசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து வருகின்றனர். தினமும் கொரோனாவால் எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது