திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (15:48 IST)

வெளிநாட்டில் விஜய் பாடலுக்கு கிடைத்த கௌரவம் – புட்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலை புட்பால் அணி ஒன்று தங்கள் கோச்சைப் பெருமை படுத்த பயன்படுத்தியுள்ளது.

விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது. தமிழ்நாட்டை தாண்டியும் அதன் புகழ் இப்பொது பரவ ஆரம்பித்துள்ளது. டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் என்ற புட்பால் கிளப் டீம் உலகளவில் புகழ் பெற்றது.

இந்நிலையில் அந்த அணியின் கோச் புகைப்படத்தை வெளியிட்டு அந்த அணி நிர்வாகம் வாத்தி கம்மிங் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.