கைலியுடன் வர தடை விதித்த விஏஓ மீது நடவடிக்கை: தஞ்சாவூரில் பரபரப்பு..!
விஏஓ அலுவலகத்திற்கு வருபவர்கள் கைலியுடன் வரக்கூடாது என தடை விதித்த விஏஓ இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி என்ற பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கரிகாலன். விமானப்படையில் வேலை செய்து ஓய்வு பெற்ற இவர் விஏஓ அலுவலகத்திற்கு வருபவர்கள் கைலி, கால் சட்டை, நைட்டி அணீந்து வரக்கூடாது என்று பெயர் பலகை ஒட்டி வைத்திருந்தார்.
இந்த நிலையில் மகனுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விவசாயி ஒருவர் கைலியுடன் வந்ததால் அவர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து கரிகாலனை இடமாற்றம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தஞ்சாவூர் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva