1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 மார்ச் 2021 (13:10 IST)

போற்றிப் பாடடி பொண்ணே… கமலைப் பார்த்து பாடிய முதியவர்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

சென்னையில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கமல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அங்கு இப்போது அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் இன்று காலை ஒரு உணவகத்துக்கு தேனீர் அருந்த சென்றபோது அங்கு வந்த முதியவர் ஒருவர் கமலைப் பார்த்து தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற ‘போற்றி பாடடி பொன்னே’ பாடலை பாடினார்.

கமல்ஹாசனும் அதை ரசித்து கேட்டபடி சிரித்தார். அந்த பாடலால் தென் தமிழகத்தில் பல இடங்களில் சாதிக் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. இதுபற்றி பேசிய கமல்ஹாசன் அந்த பாடலுக்கான நானும், வாலியும் இளையராஜாவும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.