இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தம்.. டிரம்ப் அரசு அறிவிப்பு..!
இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்த 182 கோடி ரூபாய் நிதி உதவி நிறுத்தப்படுவதாக அமெரிக்காவில் உள்ள ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தேர்தலில் அதிக வாக்கு சதவீதம் ஏற்படுத்த 21 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 182 கோடி ரூபாய் நிதி உதவி தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தொழில் அதிபர் எலான் மாஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசு, பல்வேறு நாடுகளுக்கு சில பணிகளுக்காக வழங்கி வரும் நிதியை நிறுத்தப் போவதாகவும், அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை மற்ற நாடுகளுக்கு நிதியுதியாக வழங்குவது பற்றி தனக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, சில செலவுகளை கட்டுப்படுத்த அவர் முடிவு செய்துள்ள நிலையில், இந்தியா உள்பட சில நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி உதவியை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அதில் ஒன்றுதான், இந்திய தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்க திட்டமிடப்பட்டிருந்த 182 கோடி ரூபாய்.
இந்தியா மட்டுமின்றி, கம்போடியா, செர்பியா, நேபாளம், வங்கதேசம், உள்ளிட்ட நாடுகளுக்கும் வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிதி உதவியும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva