தனுஷ் பட இயக்குநருக்கு பிறந்தநாள்...குவியும் வாழ்த்துகள்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இன்று தனது 38 வது பிறந்தநாள் தினத்தைத் கொண்டாடிவருகிறார். அவருக்கு சினிமாத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.
தமிழ் சினிமாவில் ஜிகிர்தண்டா, மெர்குரி, பீஸா, பேட்டா, போன்ற படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ்.
இவர் தற்போது விக்ரம்-6 என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இணைந்து நடிக்கவுள்ளனர். இதனால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படமும் கார்த்திக் சுப்புராஜின் வெற்றிப்படமாக அமைய எல்லோரும் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.
இஞ் ஜினியர் பட்டதாரியான இவர் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதில் வெற்றி பெற்று, சினிமாவில் நுழைந்தார். இவர் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படம் விரையில் வெளியாகவுள்ளது.