திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2023 (09:12 IST)

ஜனாதிபதிக்கு முதல்வர் கடிதம் எழுதி இருப்பது முழுவதும் கற்பனை: வானதி சீனிவாசன்

ஜனாதிபதிக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் உள்ள அனைத்தும் கற்பனை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
 
ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஆளுநர் அலுவலகம் உரிய பதில் கொடுப்பதால் முதல்வருக்கு கோபம் வந்துள்ளது என்றும் கட்சி அரசியலுக்கு ஆளுநர்கள் யாரும் வருவதில்லை என்றும் அதை நாம் வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
எந்த ஒரு மாநில அரசையும் சட்டவிரோதமாக கலைக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தமிழக அரசை கலைப்பதற்கான அனைத்து காரணங்களும் தமிழகத்திற்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
 
எதற்காக முதல்வருக்கு இந்த திடீர் பயம் வந்திருக்கிறது என்று தெரியவில்லை என்றும் அரசு அலுவலங்களில் பெறப்படும் லஞ்சம் மற்றும் சட்டம் ஒழுங்கு விஷயத்தில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் அண்ணாமலை தனக்கும் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்றும் இருவரும் அக்கா தம்பி போல் ஒற்றுமையாக கட்சியில் செயல்பட்டு வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva