1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜூலை 2023 (13:08 IST)

நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள்.. முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு..!

நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை தொடங்க வேண்டும் என இன்றைய  ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
 
மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 
சந்தை விலையை விட, குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறிகள் கிடைக்க வேண்டும் என்றும், உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் வீடு தேடி சென்று காய்கறிகளை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை தொடங்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 
 
Edited by Mahendran