''தமிழ்நாட்டில் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை ''- முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இன்று அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், '' 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று , சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. அதே நேரத்தில் சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாகத் தகவல் வெளியானது.
சமையலுக்கு தக்காளி முக்கியமானது என்பதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர இந்த விலையேற்றத்தைக் கண்டு சிரமத்தில் உள்ளனர். உடனடியாக அரசு தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும் எனவும், நடமாடும் காய்கறி அங்காடிகள் வாயிலாக நகரப் பகுதிகளில் காய்கறிகள் விற்பனை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.