செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (11:20 IST)

ஸ்டாலினுக்கு தான் பயம் வந்திருச்சு.. பிரதமருக்கு வந்த கூட்டத்தை பார்த்தபின் உதறல்: வானதி சீனிவாசன்

cm vanathi
பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் வந்து விட்டதாக நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறிய நிலையில் ஸ்டாலினுக்கு தான் பயம் வந்து விட்டது என்றும் பிரதமருக்கு வந்த கூட்டத்தை பார்த்தவுடன் அவர் உளறி உள்ளார் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது

பல்லடம், திருநெல்வேலியில் திரண்ட கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலினை பதற்றமடையச் செய்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினிடம் தான் தோல்வி பயம் தெரிகிறது

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்ற திருப்பூர் பல்லடம், திருநெல்வேலி பாஜக பொதுக் கூட்டங்களுக்கு திரண்ட லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அதனால் தனது பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் புலம்பி தீர்த்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வரத் தொடங்கியிருக்கிறார் பிரதமர் மோடி தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது.

Edited by Mahendran