செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 9 நவம்பர் 2019 (17:04 IST)

ரஜினியின் அடிக்கு சப்பைக்கட்டு கட்டிய வானதி ஸ்ரீனிவாசன்!

நடிகர் ரஜினி பாஜக குறித்து பேசியது குறித்து பாஜக நிர்வாகி வானதி ஸ்ரீனிவாசன் பேசியுள்ளார். 
 
சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது. இதன் புதிய அலுவலகத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலை நேற்று திறக்கப்பட்டது. இச்சிலையை நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் திறந்துவைத்தனர்.   
 
இந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பாஜக தரப்பில் இருந்து யாரும் என்னை வந்து அனுகவில்லை.  திருவள்ளுவருக்கு காவி பூசியது போல எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என பேசியிருந்தார். 
 
இந்நிலையில் ரஜினியின் பேட்டி குறித்து தமிழக பாஜக பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் கூறியதாவது, ரஜினிகாந்த் பாஜகவுடன் செயல்படுவார் என்ற நீண்ட நாள் கருத்துருவாக்கத்திற்கு முடிவு கட்டியிருக்கிறார். 
 
காவி நிறம் என்பது நாட்டினுடைய நிறம். அதற்கு சில கட்சிகள் மத சாயம் பூசிக்கொண்டு வருகின்றனர். ரஜினி பாஜகவில் இனைந்தால் நாங்கள் வரவேற்போமே தவிர நெருக்கடி கொடுக்கமாட்டோம். அவருக்கென்று தனி மனித சுதந்திரம் உள்ளது என கூறி ரஜினியின் வெளிப்படை பேச்சை ஒருவழியாக சமாளித்துள்ளார்.