1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (14:30 IST)

நெல்லை கண்ணன்: வைரமுத்து இரங்கல்!

nellai kannan
தமிழறிஞர் நெல்லை கண்ணன் இன்று காலமான நிலையில் அவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்
 
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நெல்லை கண்ணன் என்பவர் தமிழ் கடல் என்று அழைக்கப்படுபவர். காமராஜர் மீது பற்று கொண்ட அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவாக இருந்த நெல்லை கண்ணன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் நெல்லை கண்ணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
 
தமிழறிஞர்
நெல்லை கண்ணன் மறைவு
நெடுந்துயரம் தருகிறது
 
சங்க இலக்கியம் சாற்றியவர்
கம்பரைக் காட்டியவர்
பாரதியைப் போற்றியவர்
பாவேந்தரை ஏற்றியவர்
கண்ணதாசனை நாட்டியவர்
மறைந்துற்றார்
 
யார் அவர்போல்
பேசவல்லார்?
 
அவர்போன்ற
எள்ளல்மொழி வள்ளல்
இனி எவருளார்?
 
ஏங்குகிறேன்;
இரங்குகிறேன்