1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (12:28 IST)

இந்தியாதான் புத்தக வாசிப்பில் நம்பர் 1! – தேசிய நூலக தினத்தில் வைரமுத்து வாழ்த்து!

vairamuthu
இன்று தேசிய நூலக தினம் (National Library Day)  கொண்டாடப்படும் நிலையில் புத்தக வாசிப்பு குறித்து கவிஞர் வைரமுத்து என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் நூலகங்கள் பெருகி வளரவும், நூலக அறிவியல் துறை வளரவும் காரணமாக இருந்தவர் எஸ்.ஆர்.ரங்கநாதன். அவரது பிறந்தநாளான ஆகஸ்டு 12ம் தேதி தேசிய நூலக தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்று தேசிய நூலக தினத்தில் சென்னையில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் கடையை திறந்து வைத்து பேசிய கவிஞர் வைரமுத்து “புத்தகம் வாசிப்பதற்கு ஒரு வாரத்திற்கு 4.16 நிமிடங்களை ஜப்பான் செலவழிக்கிறது. இங்கிலாந்து 5.18 மணி நேரமும், அமெரிக்கா 5.48 மணி நேரமும், சீனா 8 மணி நேரமும் செலவழிக்கிறது.

ஆனால் இந்தியாவில் மட்டும் புத்தகம் வாசிக்க ஒரு வாரத்திற்கு 10.4 மணி நேரம் செலவழிக்கப்படுகிறது. புத்தக வாசிப்பில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதை நாம் மேலும் வளர்க்க வேண்டும்” என கூறியுள்ளார்.