வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (14:17 IST)

பேச்சாளர் 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் மறைவு !

nellai kannan
பிரபல இலக்கிய பேச்சாளரும் அரசியல்வாதியுமான  நெல்லை கண்ணன் இன்று காலமானார்.

கடந்த 1945 ஆம் ஆண்டு  நெல்லையில் பிறந்தவன் திரு. நெல்லை கண்ணன். இவர் காங்கிரஸ் தலைவர்களாக காமராஜர், சத்யமூர்த்தி, கக்கன், கம்யூனிஸ்ட் தலைவரான ஜீவா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர்.

பிரபல தொலைக்காட்சிகளில் நெல்லை கண்ணன் அவர்களின்,பட்டிமன்றம், ஆன்மிகப் பேச்சுகளும், தலைவர்களைப் பற்றிய சொற்பொழியும் கேட்பவர்களை கவரும் தன்மை கொண்டது.

சமீபத்தில் பிரதமர் மோடி பற்றி அவதூறு பேசியதற்காக கைது செய்யப்பட்டார். அதன்பின், அரசியலிலும் மேடைப் பேச்சுகளில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வந்த நிலையில், இன்று  இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயதூ 77 ஆகும் அவரது மகன்  சுரேஷ் கண்ணன் பிரபல எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.