திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 மே 2022 (09:12 IST)

ரன்னிங்ல இறங்க சொன்ன நடத்துனர்! பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவி!

accident
நாமக்கலில் தேர்வுக்கு சென்ற பள்ளி மாணவியை ஓடும் பேருந்தில் இருந்து இறங்க சொன்னதால் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு பள்ளிகளுக்கு செல்லும் வெளியூர், கிராமங்கள் மற்றும் புறநகரை சேர்ந்த மாணவர்கள் பேருந்துகளை நம்பியே பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாமக்கலில் நேற்று 11ம் வகுப்பு மாணவி இனியா ஸ்ரீ என்பவர் தேர்வுக்கு பள்ளிக்கு செல்ல தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். பள்ளி அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்த சொல்லி கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு நடத்துனர் ஓடும் பேருந்தில் இருந்தே இறங்கிக் கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது. மாணவி அவ்வாறு இறங்க முயன்றபோது தவறி விழுந்தார். இதனால் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.