1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 மே 2022 (08:47 IST)

ராஜபக்சே வழியில் நடந்தால் இதுதான் கதி! – திருமாவளவன் கருத்து!

இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் ராஜபக்சேவின் ஃபார்முலாவை பின்பற்றும் பாஜகவுக்கும் இந்நிலை ஏற்படலாம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்கள் ராஜபக்சே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டை கொளுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்து வரும் போராட்டம் குறித்து பேசியுள்ள விசிக தலைவர் திருமாவளவன் “ராஜபக்சே வழியைதான் தற்போது பாஜக பின்பற்றுகிறது. இலங்கையில் தற்போது நடைபெறும் போராட்டங்கள் இந்தியாவிலும் நடக்கும் அபாயம் உள்ளதை பாஜக உணர வேண்டும்.

மதம், இனம், மொழியை அரசியலுக்காக பயன்படுத்திய ராஜபக்சே தற்போது நாட்டை விட்டே விரட்டப்படுகிறார். ராஜபக்சேவின் வழியை பின்பற்றும் பாஜகவுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.