1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 அக்டோபர் 2018 (17:06 IST)

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி...

அண்மையில் பாடகி சின்மயி கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல்ல் குற்றச்சாட்டு சுமத்தி இருந்த நிலையில் ’உண்மையை காலம் சொல்லும்’ என்று டிவிட்டரில் ஒரு பதிவிட்டும், ’நீதிக்கு தலைவணங்குகிறேன்’ என்று கூறி அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
உணவு ஒவ்வாமை பிரச்சனையின் காரணமாக அவர் அப்பொல்லோ மருத்துவமனையில் உள்ள தீவிர சிகைச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.