1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. H.Raja idea to Vairamuthu for Me too issue

மீ டூ பிரச்சனைக்கு வைரமுத்து இப்படி செய்யலாமே! எச்.ராஜா யோசனை

வைரமுத்து
மீ டூ பிரச்சனையால் சிக்கியுள்ள பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனமும், ஒருசிலர் ஆதரவும் கொடுத்து வரும் நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்துவுக்கு யோசனை ஒன்றை கூறியுள்ளார்.

அதாவது இதே மீடூ பிரச்சனையில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் குற்றமில்லாதவர் என்பதை நிரூபிக்க தன்மீது பாலியல் புகார் தெரிவித்தவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கின்றார்.

அதேபோல் வைரமுத்து தான் பெற்ற தேசிய விருதுகளை திரும்ப கொடுத்துவிட்டு அவர் மீது குற்றஞ்சாட்டிய சின்மயி மீது வழக்கு தொடர வேண்டும்' என்று யோசனை கூறியுள்ளார். எச்.ராஜாவின் இந்த யோசனையை வைரமுத்து ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
சபரிமலையில் 144 உத்தர்வு –போலிஸ், ஐய்யப்ப பக்தர்கள் இடையே அடிதடி