எனக்கென்ன மனக்கவலை...? வைரமுத்து கேஷ்வல் டிவிட்!!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 31 டிசம்பர் 2019 (11:03 IST)
இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...? என கவிஞர் வைரமுத்து பட்டமளிப்பு விழா குறித்து டிவிட் போட்டுள்ளார். 
 
சமீபத்தில், ஒரு தனியார் பல்கலைகழகம் கவிஞர் வைரமுத்துவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்திருந்தது. இப்பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் திடீரென அவர் நிகழ்ச்சியை ரத்து செய்ததாக செய்திகள் வெளியாகின. 
 
அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரியும் டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை ரத்து செய்துள்ளது. மீண்டும் பட்டமளிப்பு விழா வேறு நாளில் நடைபெறுமா என்பது தெரியாத நிலையில், இதுகுறித்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
எனக்காகக் குரல்கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள  தமிழ் அமைப்பினர் அனைவர்க்கும் நன்றி.  இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...? என டிவிட்டியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :