மொழிப்பெயர்ப்புக்கு தமிழ் தகுதியில்லையா? வைரமுத்து ஆவேசம்
மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்திய நிலையில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இந்த புதிய கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக தமிழகத்தில் போராட்டங்களும் நடந்தன என்பதும் இது குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் புதிய கல்வி கொள்கையில் உள்ள அம்சங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக 17 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நேற்று வெளியாகியுள்ளது
தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்பட பல மொழிகளில் வெளியாகி இருந்தாலும் தமிழில் மட்டும் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஏற்கனவே முக ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது வைரமுத்து அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அவர் அதில் கூறியிருப்பதாவது:
தேசியக் கல்விக்கொள்கை
மொழிபெயர்ப்பில் தமிழ்மொழி
புறக்கணிக்கப்பட்டிருப்பது
கவலை தருவது மற்றும்
கண்டனத்துக்குரியது.
மொழிபெயர்ப்புக்குத்
தமிழ் தகுதியில்லையா?
அல்லது
தேசியக் கல்விக்கொள்கை
தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்று
கல்வியமைச்சகம் கருதுகிறதா?